குட் பேட் அக்லி பட வெற்றி.. அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் 23 வயது பிரபல நடிகை
அர்ஜுன் தாஸ்
கைதி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ். பின் அந்தகாரம், அநீதி, போர், ரசாவதி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி கோலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள அர்ஜுன் தாஸ், சமீபத்தில் வெளிவந்த முஃபாசா: தி லயன் கிங் படத்திற்காக தமிழில் டப்பிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று தினங்களுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அட இவரா
இந்நிலையில், அடுத்து அர்ஜுன் தாஸ் நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் கலக்கி வரும், 23 வயது பிரபல நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போது இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
