விஜய்க்கு நன்றி சொன்ன அர்ஜுன் தாஸ்! பாலிவுட்டில் சான்ஸ் கிடைத்தது இப்படித்தானா
கைதி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் அர்ஜுன் தாஸ். அவர் அதற்கு பிறகு மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய நெகடிவ் ரோலில் நடித்தார்.
தற்போது அர்ஜுன் தாஸுக்கு ஹிந்தியில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அவர் அங்கமாலி டைரிஸ் என்ற மலையாளப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கும் நிலையில் தற்போது அர்ஜுன் தாஸ் ட்விட்டரில் தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நன்றி கூறி இருக்கிறார்.
மாஸ்டரில் விஜய் உடன் சேர்ந்து நடிக்காமல் இருந்திருந்தால் இந்த வாய்ப்பே கிடைத்து இருக்காது என அவர் கூறி இருக்கிறார்.
பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்த உடன் அந்த விஷயத்தை முதலில் விஜய் மற்றும் லோகேஷ் ஆகியோரிடம் தான் சொன்னதாகவும் அர்ஜுன் தாஸ் கூறி இருக்கிறார்.
@vikramix @Abundantia_Ent @memadhumita @actorvijay @Dir_Lokesh @vvignarajan #ForeverGrateful https://t.co/8oxhBRIJs7 pic.twitter.com/6NRLfpd7Ei
— Arjun Das (@iam_arjundas) June 30, 2022