தெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் - அதுவும் இந்த சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கிலா

tollywood vikram arjun das
By Kathick Jul 08, 2021 11:20 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்தவர் அர்ஜுன் தாஸ்.

இதன்பின், இயக்குநர் விக்னராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகாரம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

தற்போது வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ள அர்ஜுன் தாஸ், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், கமல் கூட்டணியில் உருவாக உள்ள ‘விக்ரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படி தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் அர்ஜுன் தாஸ், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

ஆம், கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா எனும் மலையாள படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US