ஏழுமலை 2.. மருமகனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் அர்ஜுன்
நடிகர் அர்ஜுன்
திரையுலகில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
அடுத்ததாக இவர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. மங்காத்தா திரைப்படத்திற்கு பின் அஜித்துடன் அர்ஜுன் இப்படத்தில் இணைந்துள்ளார். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் உமாபதி ராமையா.
ஏழுமலை 2
இந்த நிலையில் தனது மருமகன் உமாபதி ராமையாவை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம் அர்ஜுன். இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி அவரே இயக்கப்போகிறாராம். அர்ஜுன் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஏழுமலை.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் உமாபதி ராமையா ஹீரோவாக நடிக்கிறார் என்றும், அப்படத்தை தான் அர்ஜுன் இயக்கி, தயாரிக்கப்போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
