போனி கபூர் மகனுக்கு திருமணம்! காதலி இத்தனை வயது மூத்த நடிகையா?
தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ், தெலுங்கில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் படங்கள் எடுக்கும் ஒரே பாலிவுட் தயாரிப்பாளர் அவராக தான் இருக்கும். அஜித்தின் அடுத்த படம் உட்பட பல படங்களை அவர் தயாரித்து வருகிறார்.
போனி கபூரின் முதல் மனைவி மகன் அர்ஜுன் கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். அவர் நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது என பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது.
அவர்கள் திருமணத்தை வரும் குளிர்காலத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா ஆகியோருக்கு பெரிய வயது வித்தியாசம் இருப்பது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலைக்காவுக்கு 48 வயதாகிறது, அவர் அர்ஜுனை விட 12 வயது மூத்தவர். மலைக்காவுக்கு முதல் திருமணத்தில் பிறந்த மகனுக்கே தற்போது 19 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
