வலிமை தயாரிப்பாளர் போனி கபூர் குடும்பத்தினருக்கு கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
தல அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நாளை படத்தின் ட்ரைலர் வெளியாக இருக்கிறது. அதை எதிர்பார்த்து தான் அஜித் ரசிகர்கள் அனைவரும் தற்போது காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. அவரது மகன் அர்ஜுன் கபூர், மகள் அன்ஷுலா கபூர் அகியோருக்கும் கொரோனா பாசிடிவ் என வந்திருக்கிறது. மேலும் அணில் கபூரின் மகள் ரியா கபூர் மற்றும் அவரது கணவருக்கு கொரோனா உறுதி ஆகி இருக்கிறது.
போனி மகன் அர்ஜுன் கபூருக்கு கொரோனா வருவது இது இரண்டாவது முறை, கடந்த வருடம் அவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் எந்த பாதிப்பும் இன்றி அதில் இருந்து மீண்டார். தற்போது அவருக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டு இருக்கிறது.