போனி கபூர் மகனுக்கு என்ன ஆச்சு? 10 வருஷமா சிரிக்கவே இல்லையா.. இதுதான் காரணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொடர்ந்து அஜித் படங்களை தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது AK61 படத்தை தயாரித்து வருகிறார்.
போனி கபூரின் முதல் மனைவி மகனான அர்ஜுன் கபூர் சமீப காலமாக செய்திகளில் பரபரப்பாக பேசப்படும் ஒருவராக இருந்து வருகிறார். அவரை விட மிக அதிக வயதுடைய மலைக்கா அரோரா என்ற நடிகையை காதலித்து வருவது தான் அதற்கு காரணம். அவர்கள் திருமணமும் விரைவில் நடைபெற இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் அர்ஜுன் கபூர் தான் சிரித்து 10 வருடங்கள் ஆகிறது என தெரிவித்து உள்ளார். "எல்லோரும் என் முகத்தை பார்த்து நான் சிரிப்பதே இல்லை என சொல்கிறார்கள். என் சிரிப்பு என்னை விட்டு சென்று 10 வருடங்கள் ஆகிறது என எப்படி அவர்களிடம் சொல்ல முடியும்" என தனது தாய் மோனா கபூர் இறந்தது பற்றி அவர் கூறி இருக்கிறார்.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
