12 வயது மூத்த காதலி.. திடீரென பிரேக்கப் செய்துவிட்டாரா போனி கபூரின் மகன்?
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பல மொழிகளில் படங்கள் தயாரித்து வருகிறார்.
போனி கபூர் மற்றும் அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூர் தற்போது ஹிந்தி சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார்.
அர்ஜுன் கபூர் பிரபல நடிகை மலைக்கா அரோரா என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இடையே 12 வயது வித்தியாசம் இருப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
50 வயதான மலைக்கா அரோரா 38 வயதான அர்ஜுன் கபூர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது தான் ட்ரோல்களுக்கு காரணம்.
இரண்டு மாதத்திற்கு முன் பிரேக்கப்
இந்நிலையில் அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார்கள் என முன்னணி பாலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆனால் அவர்கள் மீண்டும் சேர முயற்சித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இருவருமே பிரேக்கப் பற்றி வாய்திறக்காமல் இருக்கின்றனர். அவர்கள் அறிவித்தால் தான் பிரேக்கப் உறுதியாகும்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
