12 வயது மூத்த நடிகையுடன் போனி கபூர் மகன் காதல்! வயது வித்யாசம் பற்றி பேசுபவர்களுக்கு பேட்டியில் பதிலடி
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழில் அஜித்தை வைத்து பல படங்களை தயாரித்து வருகிறார்.
முதல் மனைவி மகன் 'அர்ஜுன் கபூர்'
போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்யும் முன்பு மோனா ஷவ்ரி கபூர் உடன் 13 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். அவர்களுக்கு அன்ஷுலா கபூர் என்ற மகளும், அர்ஜுன் கபூர் என்ற மகனும் உள்ளனர். அதன் பின் ஸ்ரீதேவியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட போனி கபூருக்கு ஜான்வி மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் பிறந்தனர்.
தற்போது அர்ஜுன் கபூர் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். அவர் தன்னை விட 12 வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
அவர்களுக்கு நடுவில் அதிக அளவு வயது வித்தியாசம் இருப்பதை நெட்டிசன்கள் தொடர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வரும் நிலையில் அது பற்றி அர்ஜுன் கபூர் சமீபத்திய பேட்டியில் விளாசி பேசி இருக்கிறார்.
"மக்களுக்கு எதை பற்றியாவது opinion சொல்வது பிடிக்கும். இந்தியாவில் gossip செய்வது எல்லோருக்கும் அதிகம் பிடிக்கும். அந்த விஷயத்தில் எல்லோரும் பெண்கள் ஆகிவிடுவார்கள்.
எப்போது திருமணம், அவர்கள் ஜோடி நன்றாக இல்லை, இது எத்தனை நாள் நீடிக்கும்?, அவன்கிட்ட அப்படி என்ன இருக்கு, அவன் எப்படி இருக்கான் பாரு, வாழ்க்கையே போச்சு.. இப்படி பல விதமாக பேசுவார்கள். அப்படி மக்கள் பேசுவதை மாற்ற ஒரு வெள்ளிக்கிழமை அல்லது ஒரு பேட்டி போதும். மக்களுக்கு உங்களை பற்றி இருக்கும் கருத்து எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
"ஊ சொல்றியா மாமா" நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு! பெண்ணை படுக்கைக்கு அழைத்தாரா?