ஆக்ஷன் கிங் அர்ஜுன் மாமனார் யார் தெரியுமா? அவரும் பிரபல நடிகர் தான்
கோலிவுட்டில் ஒரு காலத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அர்ஜுன். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும் சர்வைவர் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது, படம் இயக்குவது என பிசியாக இருந்து வருகிறார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மாமனார் ராஜேஷ் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் அவர்.
"என் மாமனாரை மட்டும் நான் மிஸ் செய்யவில்லை, ஒரு சிறப்பான நடிகர், சிறந்த மனிதன், என் அப்பாவின் நெருக்கமான நண்பரையும் மிஸ் செய்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த வாரம் காலமானார் நடிகர் ராஜேஷ் என்கிற வித்யாசாகர். கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களில் நடித்த அவர் தான் அர்ஜுனின் மாமனார். அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ருந்த நிலையில் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan