அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி: திரை விமர்சனம்

By Sivaraj Apr 19, 2025 05:00 AM GMT
Report

கல்யாண் ராம், விஜயஷாந்தி நடிப்பில் வெளியாகியுள்ள 'அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி' தெலுங்கு திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி: திரை விமர்சனம் | Arjun S O Vyjayanthi Movie Review

கதைக்களம்

IPS ஆபிசர் வைஜெயந்தி குற்றவாளிகளை தனியாளாக சென்று சண்டையிட்டு என்கவுண்டர் செய்யும் அளவுக்கு தைரியமானவர். தன்னைப் போலவே தனது மகன் அர்ஜூனையும் IPS ஆக்க நினைக்கிறார்.

ஆனால், கஸ்டம்ஸ் ஆபிசரான தனது தந்தை (ஆனந்த்) ரௌடி கும்பலால் கொல்லப்பட, அதற்கு பழிவாங்க அர்ஜூன் தாதாவாக உருவெடுக்கிறார். இதனால் கோபமடையும் வைஜெயந்தி வேலையை ராஜினாமா செய்துவிட்டு மகனை வெறுத்து ஒதுக்குகிறார்.

அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி: திரை விமர்சனம் | Arjun S O Vyjayanthi Movie Review

இதற்கிடையில் பதான் எனும் கேங்ஸ்டரின் மகன் அர்ஜூனை கொல்ல முயற்சிக்கிறார். அதிலிருந்து தப்பிக்கும் அர்ஜூன், குறி தனக்கு வைக்கப்படவில்லை தன் அம்மாவுக்குதான் என அறிகிறார்.

அதன் பின்னர் தன் அம்மாவை கொல்ல நினைக்கும் கேங்ஸ்டர் பதானுக்கு சவால் விடும் அர்ஜூன், அவரை காப்பாற்றினாரா? தாயும், மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை.  

படம் பற்றிய அலசல்

1990யில் வெளியான கர்தவ்யம் (தமிழில் வைஜெயந்தி ஐபிஎஸ்) என்ற படத்தில் நடித்த அதே கேரக்டரில் விஜயஷாந்தி நடித்திருக்கிறார். அதே மிடுக்கான பொலிஸார் அதிகாரியாக அறிமுகம் ஆகும் அவர், முதல் காட்சியிலேயே ஒரு ரௌடி கும்பலை தனியாளாக புரட்டியெடுக்கிறார்.

அந்த பெரிய ஸ்டண்ட் காட்சியை டாப் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவிற்கு மிரட்டலாக செய்துள்ளார் அவர். அர்ஜூன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நந்தமுரி கல்யாண் ராம், ஆக்க்ஷன் காட்சிகளில் தூள் கிளம்பினாலும், தாயை நினைத்து உருகும் காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி: திரை விமர்சனம் | Arjun S O Vyjayanthi Movie Review

சூர்யாவின் ஜாதகம், நடிக்க இஷ்டம் இல்லை ஆனால்.. சூர்யா குறித்து அப்பா சிவகுமார் ஓபன் டாக்

சூர்யாவின் ஜாதகம், நடிக்க இஷ்டம் இல்லை ஆனால்.. சூர்யா குறித்து அப்பா சிவகுமார் ஓபன் டாக்

இந்தி நடிகர் சோஹைல் கான் 'பதான்' என்ற வில்லன் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அவருக்கான காட்சிகள் குறைவு என்றாலும், அவரது அறிமுக காட்சி மிரட்டல். மொட்டை கிணற்றுக்குள் 20 பேரை அடித்தே கொன்றுவிட்டு, தனது இரு மகன்களை காப்பாற்றும் அந்த ஓப்பனிங் சீன் மிக அருமை.

வழக்கமான தெலுங்கு ஆக்க்ஷன் படம்தான் என்றாலும், விறுவிறுப்பாக திரைக்கதையை கொண்டு சென்றதன் மூலம் ஜெயித்திருக்கிறார் இயக்குநர். காமெடிக்கு என்று யாரையும் நடிக்கவைக்காத இயக்குநர், ஹீரோ உட்பட எல்லா கேரக்டரையும் சீரியஸ் மோடிலேயே படம் முழுக்கு கொண்டு சென்றிருக்கிறார். என்றாலும் காட்சிகள் வேகமாக நகர்வதால் அந்த குறை தெரியவில்லை.

கமிஷனராக வரும் ஸ்ரீகாந்த்தும் தனது பங்குக்கு நல்ல நடிப்பை தந்திருக்கிறார். கடலில் எஞ்சின் ரிப்பேர் ஆன படகில் மாட்டிக்கொள்ளும் கல்யாண் ராம், தாயை காப்பாற்ற கரைக்கு எப்படி வந்தார் என்பதை காட்டியவிதம் செம. அதேபோல் கிளைமேக்ஸ் காட்சியில் தாயை காப்பாற்றும் ஹீரோ செய்யும் ஒரு விஷயம் 'என்னப்பா இது!' இந்த அளவுக்கு அம்மா மேல பாசமா என்று கேட்கத் தோன்றும்.

அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி: திரை விமர்சனம் | Arjun S O Vyjayanthi Movie Review

படத்தில் பெரிய குறையாக தெரிவது ஹீரோவுக்கு வரும் இரண்டு பிளாஷ்பேக்தான். அதை முதல் பாதி, இரண்டாம் பாதி என இயக்குநர் பிரித்து வைத்திருக்கிறார். மேலும், அவ்வளவு பெரிய வில்லனை நாலு அடி அடிச்சு ஹீரோ வீழ்த்துவது எல்லாம் ரொம்ப டூமச். 

க்ளாப்ஸ்

சண்டைக்காட்சிகள்

திரைக்கதை நடிப்பு

மைனஸ்

ஓவர்டோஸான லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் லாஜிக் எல்லாம் பார்க்காமல் அதிரடி ஆக்க்ஷன் படத்தை விரும்புபவர்கள் ஒருமுறை ரசிக்கலாம் இந்த அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தியை.  

அர்ஜூன் சன் ஆப் வைஜெயந்தி: திரை விமர்சனம் | Arjun S O Vyjayanthi Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US