59 வயதிலும் தனது உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகர் அர்ஜுன்.. மாஸ் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் மூலம் தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு ஆக்ஷன் கிங் என்ற பெயர் எடுத்தவர் நடிகர் அர்ஜுன்.
இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த ஹீரோ, இரும்புத்திரை ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சில மாதங்களுக்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் களமிறங்கி, அசத்தினார்.
மேலும், தற்போது இவருடைய நடிப்பில் இரு திரைப்படங்கள் படம் உருவாகி வருகிறது.
நடிகர் அர்ஜுன், தனது இளம் வயதில் இருந்தே, ஒர்கவுட் செய்து தனது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், 59 வயதாகும் நடிகர் அர்ஜுன் தனது சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதில், மிகவும் ஃபிட்டாக இருக்கும் அர்ஜுனை பார்த்து பலரும், நீங்க ரியல் இன்ஸ்பிரேஷன் சார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு) IBC Tamilnadu
