நடிகர் அர்ஜுனின் தாயார் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பம்

By Parthiban.A Jul 23, 2022 08:58 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85.

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

நடிகர் அர்ஜுனின் தாயார் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பம் | Arjun Sarja Mother Lakshmi Devi Passes Away

பெங்களூரு ஜெயாநகர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் இன்று நடைபெற்று என தெரிகிறது. தாயார் மரணம் மற்றும் இறுதி சடங்கு பற்றி அர்ஜுன் குடும்பம் இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு துயரம் ஏற்பட்டு இருக்கிறது. 

நடிகர் அர்ஜுனின் தாயார் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பம் | Arjun Sarja Mother Lakshmi Devi Passes Away

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US