மனைவியுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் அர்ஜுன்.. இதோ பாருங்க
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் மூலம் தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு ஆக்ஷன் கிங் என்ற பெயர் எடுத்தவர் நடிகர் அர்ஜுன்.
இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல், சேவகன், ஜெய் ஹிந்த் உள்ளிட்ட படங்களை இயக்கியும் இருக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த ஹீரோ, இரும்புத்திரை ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் அர்ஜுன் கடந்த 1988ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தனது மனைவியுடன் இளம் வயதில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை வெளியிட்ட, அதில் திருமண நாள் வாழ்த்தையும் கூறியுள்ளார் அர்ஜுன்.
இதோ அந்த பதிவு..
Happy anniversary my love..life is always beautiful with you. pic.twitter.com/ogZuqtdu44
— Arjun (@akarjunofficial) February 8, 2022

Optical illusion: கண்களை பரிசோதிக்கும் நுட்பமான படம்!இதில் இருக்கும் “80” கண்களுக்கு தெரிகிறதா? Manithan
