சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்.. பிக்பாஸ் பற்றி உறுதியான தகவல்!
பிக் பாஸ் 8வது சீசன் இரண்டாவது வாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆண்கள் பெயர்கள் தான் அதிகம் இருந்தது. 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஆகியோர் இருந்தனர்.
முத்துகுமரன் பேச்சை கேட்டு ஆண்கள் டீமில் இருப்பவர்கள் எல்லோரும் சவுந்தர்யாவை நாமினேட் செய்தனர். அவருக்கு மட்டுமே 7 நாமினேஷன் வந்ததால் மற்ற பெண்கள் பெயர்கள் நாமினேஷன் லிஸ்டில் வரவில்லை. இதை விஜய் சேதுபதியும் இன்றைய எபிசோடில் அவரை கண்டித்தார்.
அர்னாவ் எலிமினேஷன்
ஞாயிற்றுக்கிழமை எபிசோடு ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் அதில் அர்னாவ் தான் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
ஷோ தொடங்கியதில் இருந்தே அவர் மீது அதிகம் விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.