அவரை என் வாழ்க்கையில் இருந்து தூக்கிவிட்டேன்.. அன்ஷிதா கூறியது யாரை, அர்னவ் பதில்
பிக்பாஸ் 8
பிக்பாஸ் 8, எந்த சீசனிலும் இல்லாத அளவு இதில் நிறைய புது விஷயங்கள், புத்தம் புது டாஸ்க்குள், அதிரடி திருப்பங்கள் என நிறைய விஷயங்கள் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காதது நடந்தது.
நிறைய சின்னத்திரை பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். கடைசியாக இந்நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது, முத்துக்குமரன் டைட்டிலை ஜெயித்துவிட்டார்.
அர்னவ் பதில்
இந்த பிக்பாஸ் 8வது சீசனின் கடைசி நிகழ்ச்சியில் அன்ஷிதா தனது வாழ்க்கையில் இருந்து ஒரு நபரை வெளியேற்றிவிட்டதாக அதன்பிறகே தான் சந்தோஷமாக இருப்பதாக அன்ஷிதா கூறியிருந்தார்.
இதுகுறித்து செல்லம்மா சீரியலில் அன்ஷிதாவுடன் இணைந்து நடித்த அர்னவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அவங்களுடைய சொந்த விஷயங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
அதோடு அன்ஷிதாவுடன் நட்பு தொடர்கிறதா என கேட்டபோது நோ கமெண்ட்ஸ் என்றிருக்கிறார்.