சொந்த மகள் வீட்டில் சுவர் ஏறி குதித்த அத்து மீறிய நடிகர்!.. கார்த்தி பட நடிகை வேதனை
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அர்த்தனா பினு.
இப்படத்தை தொடர்ந்து வென்னிலா கபடி குழு 2ல் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது அர்த்தனா பினு தமிழ் வாஸ்கோட காமா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜயகுமாருக்கும் அர்த்தனா பினுவின் அம்மாவுக்கும் சில தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து பெற்றனர். தற்போது அர்த்தனா பினு , அவரின் அம்மா, சகோதரி, 85+ வயதுடைய எனது தாய்வழி பாட்டியுடன் தனியாக வசித்து வருகிறாராம்.
இந்நிலையில் விஜய் குமார், அர்த்தனா பினு வீட்டிற்கு அடிக்கடி அத்துமீறி சென்றுகொலை மிரட்டல் விடுவதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.