ஆருத்ரா மோசடி வழக்கு, சிக்கிய நடிகர் ஆர்.கே.சுரேஷ்- திடீர் தலைமறைவு
ஆருத்ரா வழக்கு
சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்ய இப்போது ஏமாந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
சிக்கிய பிரபலம்
அப்படி செய்த விசாரணையில் தற்போது நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவரது விசாரிக்க போலீசார் முயன்றபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
2வது நாளில் சிம்புவின் பத்து தல அதிரடி மாஸ் வசூல்- எத்தனை கோடி தெரியுமா?