திரையரங்கில் திகில் கிளப்பும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 படத்தின் மொத்த வசூல்... முழு விவரம்
டிமான்டி காலனி 2
கடந்த 2015ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டிமான்டி காலனி.
பார்ப்போரை ஒரே ஒரு வீடு வைத்து திகிலூட்டிய இப்படத்தின் 2ம் பாகம் தயாராகி வந்தது. அதில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி, முத்துக்குமார், அருண் பாண்டியன் உள்ளிட்டோர் நடித்தனர், சாம்.சி.எஸ். இசையமைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்த 2ம் பாகம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.
தமிழில் 2ம் பாகம் வெற்றியடைய வரும் ஆகஸ்ட் 23ம் தேதி தெலுங்கில் பதிப்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வெளியாக இருக்கிறது.
வசூல் என்ன
திகில் படங்களுக்கு மக்கள் எப்போதும் கொடுக்கும் ஆதரவு இந்த டிமான்டி காலனி 2 படத்திற்கு பெரிய அளவில் கிடைத்துள்ளது.
முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தும் டிமான்டி காலனி 2 படம் மொத்தமாக ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
