முத்து போட்ட ஸ்கெட்ச்.. சீதாவிடம் வசமாக சிக்கிய அருண்! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
சிறகடிக்க ஆசை
கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் கணவர் அருணை சிலர் தெருவில் அடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற முத்து உடனடியாக அருணுக்கு உதவி செய்து, அவரை காப்பாற்றினார்.
ஆனால், முத்து தன்னை காப்பாற்றியதாக சீதாவிடம் கூறாமல், தன்னை ஆள் வைத்து அடித்ததே முத்துதான் என கூறிவிட்டார் அருண். இதனால் சீதாவிற்கும் மீனாவிற்கும் இடையே பெரும் சண்டையே வெடித்தது. இதில் சீதாவை மீனா அடித்துவிட்டார்.
வசமாக சிக்கிய அருண்
அருணின் இந்த சகுனி செயலில் குடும்பத்திற்குள் சண்டை வந்த நிலையில், முத்து செம மாஸாக அருணுக்கு ஸ்கேட்ச் போட்டு, அருணின் உண்மை முகத்தை சீதாவிற்கு காட்டிவிட்டார். அதுகுறித்து தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் முத்து மீது எந்த தவறும் இல்லை, அருண்தான் குடும்பத்திற்குள் சண்டை வரவேண்டும் என இப்படி செய்துள்ளார் என சீதாவிற்கு தெரியவந்துவிட்டது. இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.