நீங்களே இவ்ளோ வாங்கினா எப்படி.. விஜய், அஜித்தை தாக்கி பேசிய அருண் பாண்டியன்!

Vijay Ajith Kumar Arun Pandian
By Parthiban.A Apr 16, 2022 02:00 PM GMT
Report

தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். அவர்கள் இருவரது பெயரையும் குறிப்பிட்டு தயாரிப்பாளரும் நடிகருமான அருண் பாண்டியன் தாக்கி பேசி இருக்கிறார்.

அருண் பாண்டியன்

நடிகர் அருண் பாண்டியன் இன்று நடந்த ஒரு திரைப்பட விழாவில் பேசினார். அப்போது அவர் 18 வருடங்களுக்கு பிறகு தான் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்ததாக கூறி இருக்கிறார். அந்த படம் தனக்கும் தன் மகளுக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக கூறி இருக்கிறார் அவர்.

நீங்களே இவ்ளோ வாங்கினா எப்படி.. விஜய், அஜித்தை தாக்கி பேசிய அருண் பாண்டியன்! | Arun Pandian Slam Ajith Vijay Getting Huge Salary

அஜித் விஜய்யை தாக்கி பேச்சு

அஜித் விஜய்யை தாக்கி அருண் பாண்டியன் பேசியதாவது..

"தமிழ் சினிமாவில் பொற்காலம் எல்லாம் பாரதிராஜா சார் படம் பண்ணிட்டு இருந்தபோது. இப்போது எல்லாம் அப்படி இல்லை. எல்லா மொழி படங்களும் தற்போது தமிழ்நாட்டில் கொடி கட்டி பறந்துகொண்டிருக்கிறது."

"சமீபத்தில் வந்த அஜித் படமோ, விஜய் படமோ சினிமாவுக்கு செலவு செய்வதில்லை.. தனக்கு செலவு செய்துகொள்கிறார்கள். 90 சதவீதம் அவர்கள் வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்."

"அப்போது எல்லாம் சம்பளத்திற்கு 10 சதவீதம் போகும்.. மீதம் 90 சதவீதம் படம் எடுப்பதற்கு இருந்தது" என அவர் கூறி இருக்கிறார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US