பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் பிரசாத் தனது பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் பாருங்க- வீடியோவுடன் இதோ
தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சீரியல் ஆரம்பத்தில் சாதாரண வரவேற்பை பெற்று வந்த நிலையில் ஒரே ஒரு நாயகியின் புகைப்படம் செம டிரண்டாக மக்களின் கவனத்திற்கு தொடர் வந்தது.
அதில் இருந்து சீரியலின் டிஆர்பி ஏறு முகத்திலேயே உள்ளது, எனவே கதையையும் பார்த்து பார்த்து வைத்து வருகிறார்கள். ஒரு வாரம் வில்லிக்கான களம் என்றால் அடுத்து நாயகிக்கான ஸ்கோப் வைத்து கதையை நகர்த்தி வருகின்றனர்.
இப்போது மக்கள் அனைவரும் விரும்பிய காட்சிகள் இனி வரப்போகிறது. அது என்னவென்றால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி 6 மாதம் ஒன்றாக இருக்கப்போகிறார்கள்.
அந்த காலகட்டத்தில் பாரதி, கண்ணம்மாவை கண்டிப்பாக புரிந்துகொள்வார் என ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அங்கேயும் இயக்குனர் ஏதாவது டுவிஸ்ட் வைப்பாரா இல்லை என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது இந்த சீரியலின் கதாநாயகன் அருண் பிரசாத் தனது பிறந்தநாளை வேறொரு மாநிலத்தில் கொண்டாடி வருகிறார். பிறந்தநாள் இரவு எடுத்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.