அர்ச்சனா பற்றி பேசிய விஜய் சேதுபதி.. வெட்கப்பட்ட அருண் பிரசாத்! என்ன நடந்தது பாருங்க
பிக் பாஸ் 8ம் சீசனில் கடந்த வாரம் போட்டியாளர்கள் எல்லோரும் அவர்களது கடந்து வந்த பாதையை பற்றி கதை சொல்ல வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அப்போது பல போட்டியாளர்கள் தங்களது சோக கதையை கூறினார்கள். அருண் பிரசாத் பேசும்போது தான் காதலில் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அவர் கடந்த சீசன் டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனாவை தான் காதலிப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
வெட்கப்பட்ட அருண் பிரசாத்
நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பேசும்போது அருண் பிரசாத் சட்டை மிக வித்தியாசமாக இருப்பதாக கூறினார். சட்டை முழுக்க பட்டன்கள் பதிக்கப்பட்டு இருந்தது பற்றி அவர் பேசினார்.
உங்க டிசைனர் ரொம்ப நல்ல பன்றாங்க என விஜய் சேதுபதி கூற, 'என் friend தான் சார் அதை பண்றாங்க' என அருண் பிரசாத் காதலி அர்ச்சனாவை அங்கு குறிப்பிட்டார்.
அதை கேட்டு மற்ற போட்டியாளர்களை அவரை கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் அருண் பிரசாத் வெட்கப்பட தொடங்கிவிட்டார்.
"அதான் எல்லோர் முன்பும் சொல்லிவிட்டீர்களே, அப்புறம் என்ன ரகசியம்" என கேட்டு விஜய் சேதுபதியும் அவரை கலாய்த்தார்.