பாலா யார் என்பது இதன்மூலம் தெரியவரும்.. அருண் விஜய்யின் அதிரடி பதில்
அருண் விஜய்
சுந்தர். சி இயக்கிய முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி பின் துள்ளித் திரிந்த காலம் படத்தின் மூலம் தனது முதல் வெற்றியை கண்டவர் நடிகர் அருண் விஜய்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவருக்கு திரும்புமுனையாக அமைந்த படம் அஜித்தின் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம்.
தற்போது, அருண் விஜய் நடிப்பில் வணங்கான் திரைப்படம் வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் உருவான இப்படம் நாளை வெளியாக உள்ளது.
அதிரடி பதில்
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாலா குறித்து அருண் விஜய் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், " இப்படம் அனைவருக்கும் பிடித்த ஒரு படமாக அமையும். வணங்கான் படத்தின் மூலம் பாலா யார் என்பது இந்த தலைமுறையினருக்கு தெரியவரும்.
ஒரு எதார்த்தமான படமாக வணங்கான் உருவாகி உள்ளது. பாலா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
