அஜித்துக்கு நான் போட்டியா? மோதல் பற்றி அருண் விஜய் கொடுத்த பதில்
நடிகர் அருண் விஜய் அடுத்து நடித்திருக்கும் படம் வணங்கான். பாலா இயக்கி இருக்கும் அந்த படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க தொடங்கினார். ஆனால் அதன் பிறகு அவர் நடிக்க முடியாது என கூறி வெளியேறிவிட அதன் பிறகு அருண் விஜய்யை வைத்து படத்தை எடுத்து முடித்திருக்கிறார் பாலா.
வணங்கான் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தற்போது அறிவிப்பு வந்திருக்கிறது.
அஜித் உடன் போட்டியா?
பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லீ படம் ரிலீஸ் ஆகும் நிலையில் அதற்கு போட்டியாக அருண் விஜய் படம் வெளியாகிறது.
அஜித் உடன் போட்டியா என இது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அஜித் சார் உச்சம். அவருக்கு யாரும் போட்டி கிடையாது. அவரது ரசிகர்கள் எல்லோரும் என்னையும் நேசிக்கிறார்கள். இது போட்டி கிடையாது. எங்களுக்கு ஒரு சின்ன இடம் கிடைக்கும் என்பது தான்' என அருண் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
