சிவகார்த்திகேயனுக்கும், அருண் விஜய்க்கும் இடையே சண்டையா? உண்மையை உடைத்த நடிகர்
சிவகார்த்திகேயன் - அருண் விஜய் மோதல்
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் அருண் விஜய் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக மோதல் இருப்பதாக பல செய்திகள் வெளிவந்தன.
அதற்கு காரணம், சில வருடங்களுக்கு முன் ட்விட் ஒன்றை அருண் விஜய் போட்டிருந்தார். அது சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் அருண் விஜய் பதிவு செய்துள்ளார் என்று கூறப்பட்டது.
இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயனின் Mr. லோக்கல் படத்தில் காமெடியான வசனம் அமைத்திருக்கும். இதன்முலம், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுள்ளது என்று ரசிகர்கள் உறுதி செய்துவிட்டனர்.
ஆனால், இருவருமே இதுகுறித்து எந்த ஒரு இடத்திலும் வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால், சமீபத்தில் அருண் விஜய்யின் மகன் ஆரவ் விஜய் நடித்து வெளிவந்த 'ஓ மை டாக்' படத்தை பார்த்துவிட்டு, ஆரவ் விஜய்யை பாராட்டினார் சிவகார்த்திகேயன்.
Happy birthday Thambi ❤️Enjoyed your performance in Oh my dog.. Keep going, best wishes for your studies and acting career ???? https://t.co/C0VIlb7ziN
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 9, 2022
இதன்பின், அருண் விஜய் அதற்கு நன்றி தெரிவித்து ட்விட் ஒன்றை பதிவு செய்திருந்தார். இதன்முலம் இருவருக்கும் இடையே இருந்த மோதல் தீர்ந்துவிட்டது என்று அனைவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.
Thanks a lot for the wishes brother!!❤️ Really kind of you to wish Arnav.. will surely pass it on to him ?? https://t.co/vvljqnlbj3
— ArunVijay (@arunvijayno1) May 9, 2022
இந்நிலையில், சமீபத்தில் யானை படத்தின் பிரஸ் மீட்டில் அருண் விஜய்யிடம் ' உங்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் சண்டையா ' என்று கேள்வி கேட்டகப்பட்டது.
இதற்கு பதிலளித்த நடிகர் அருண் விஜய் ' அது ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் மட்டும் தான். எங்களுக்குள் தனிப்பட்ட மோதல் எதுவும் இல்லை. அவர் தற்போது சினிமாவில் இருக்கும் இடத்தை பார்க்கும் பொழுது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ' என்று கூறியுள்ளார்.

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
