மகனுடன் ஆட்டோவில் பயணித்துள்ள நடிகர் அருண் விஜய்- எங்கே சென்று என்ன வாங்கினார் பாருங்க

Yathrika
in பிரபலங்கள்Report this article
அருண் விஜய்
தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் களமிறங்கினாலும் வெற்றிப்பெற படாத கஷ்டங்கள் பட்டு இப்போது ஓரளவிற்கு வெற்றிக் கண்டுள்ளவர் அருண் விஜய்.
இவரது நடிப்பில் சமீபத்தில் மிஷின் சாப்டர் ஒன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார், படம் விரைவில் வெளியாகவும் உள்ளது.
இப்படங்களை தாண்டி பார்டர் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் சில காரணங்களால் இன்னும் வெளிவரவில்லை.
இன்ஸ்டா பதிவு
இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் ஆட்டோவில் சென்று மீன் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மீன் மார்க்கெட்டில் உள்ளவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர்கள் சக மக்களிடம் காட்டும் அன்பு ஆச்சரியமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இதோ அவர் பதிவு செய்த புகைப்படங்கள்,