நடிகர் அருண் விஜய்க்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தானாம்.. யார் தெரியுமா
அருண் விஜய்க்கு பிடித்த நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் யானை.
வெளியான நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை யானை திரைப்படம் பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அங்கி சிறகுகள், பார்டர், பாக்ஸர் ஆகிய படங்கள் அருண் விஜய் கைவசம் உள்ளது.
இந்நிலையில், நடிகர் அருண் விஜய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொன்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். இதற்கு உடனடியாக நடிகர் ரஜினிகாந்த் என்று பதிலளித்துள்ளார் அருண் விஜய்.
இதன்முலம் நடிகர் விஜய்க்கு பிகவும் பிடித்த நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரியவந்துள்ளது.