சிவகார்த்திகேயனுக்கு பதிலளித்த அருண் விஜய் ! முடிவுக்கு வந்த கோலிவுட் சண்டை..
முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய்.
இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒரு சர்ச்சை எப்போதும் பெரிதாக பேசப்படும், அப்படியான ஒரு விஷயம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஆம், அப்போது அருண் விஜய் சிவகார்த்திகேயனை விமர்சிப்பது போல சர்ச்சையாக ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
அப்போதில் இருந்து சமூக வலைத்தளங்களில் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொள்வது இல்லை, பொது இடங்களில் பேசிக்கொள்வதில்லை.
Happy birthday Thambi ❤️Enjoyed your performance in Oh my dog.. Keep going, best wishes for your studies and acting career ???? https://t.co/C0VIlb7ziN
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 9, 2022
முடிவுக்கு வந்த சண்டை
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் மகனுக்கு திடீரென பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருந்தார். அவர் சொன்ன அந்த வாழ்த்தை தொடர்ந்து சர்ச்சைகள் எல்லாம் உடைக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் பதிவிற்கு நன்றி தெரிவித்து நடிகர் அருண் விஜய் பதில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
Thanks a lot for the wishes brother!!❤️ Really kind of you to wish Arnav.. will surely pass it on to him ?? https://t.co/vvljqnlbj3
— ArunVijay (@arunvijayno1) May 9, 2022
நிர்வாணமாக நடிக்க சொன்னாங்க: ஷாக் கொடுத்த பூர்ணா