அருண் விஜய் நடித்துள்ள ரெட்ட தல படத்தின் முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்...
அருண் விஜய்
தமிழ் சினிமாவில் பிரபலத்தின் வாரிசுகள் களமிறங்கி வந்தாலும் எல்லோருக்கும் வெற்றிப் பாதையாக அமைவது இல்லை.
அப்படி அருண் விஜய் என்ட்ரி சினிமாவில் ஈஸியாக இருந்தாலும் அவரால் அவ்வளவாக சாதிக்க முடியவில்லை. ஒரு வெற்றி காணவே ரொம்ப கஷ்டப்பட்டார், ஆனால் அவருக்கு ரீச் கொடுத்தது அஜித்தின் என்னை அறிந்தால் படம் தான்.
அதன்பிறகு அருண் விஜய் படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கவும் ஆரம்பித்தார்கள்.

ரெட்ட தல
தற்போது க்ரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய்.
இரட்டை வேடங்களில் அவர் நடித்துள்ள இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படம் ரூ. 75 லட்சம் வசூலித்துள்ளதாம்.