தீராத முழங்கால் வலியால் சிகிச்சை எடுத்து வரும் ஆக்ஷன் ஹீரோ.. வெளியான புகைப்படம்
பல வித்தியாசமான ஆக்ஷன், திரில்லர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருண் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் சினம் திரைப்படம் வெளியானது.
தற்போது ஏ.ல் விஜய் இயக்கும் "அச்சம் என்பது இல்லையே" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை எமி ஜாக்சன் நடிக்கவுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய் டூப் எதுவும் போடாமல் அவரே அனைத்து சண்டை காட்சிகளிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தீராத முழங்கால் வலி
இந்த படத்தின் சண்டை காட்சியின் போது அருண் விஜய்க்கு முழங்காலில் அடிபட்டதாம். அப்போது காயத்துக்கு சிகிச்சை அளித்தும் குணமாகாததால், தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.
அங்கு எடுத்த புகைப்படங்களை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்.
நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ