நயன்தாராவிற்கு வில்லனாகும் முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
மூக்குத்தி அம்மன் 2
நடிகை நயன்தாரா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஒருவர். இவர் நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்ததை நாம் அறிவோம்.
இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்தது. ஆனாலும் கூட ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அறிவிப்பை கடந்த ஆண்டு வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
ஆனால், இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை, இயக்குநர் சுந்தர் சி தான் இயக்குகிறார் என அறிவித்திருந்தனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
வில்லன் அப்டேட்
இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. இந்த தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழுகும் உடல்கள்... சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு நாடொன்றின் கொடூர முகம் News Lankasri
