தனது நான்கு சகோதரிகளுடன் நடிகர் அருண் விஜய்.. சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்
வில்லனாக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் நடிப்பில் சிறந்த விளங்குபவர் நடிகர் அருண் விஜய்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக ரசிகர்கள் மனதில் இருந்து, நீங்கா இடத்தை பிடித்துவிட்டார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
மேலும் தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்டர் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
நடிகர் அருண் விஜய், தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகன் என்பதனை நாம் அறிவோம்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது சகோதரிகள் ஸ்ரீதேவி, ப்ரீத்தா, கவிதா, அனிதா என நான்கு பேருடன் இணைந்து சமீபத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த அழகிய குடும்ப புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
