ICUவில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை- சோகத்தில் ரசிகர்கள்
அருந்ததி நாயர்
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து படங்கள் நடித்த நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அருந்ததி நாயர்.
இவர் தமிழில் விஜய் ஆண்டனியின் சைத்தான், பொங்கியெழு மனோகரா, பிஸ்தா, கன்னிராசி, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்கள் மற்றும் வெப் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துள்ளார்.
பயங்கர விபத்து
இவர் கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை சிலர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
3 வாரங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலை தேறவில்லை, தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறாராம்.
அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தினமும் ரூ.2 லட்சம் செலவு ஆவதாகவும், இதுவரை ரூ.40 லட்சத்துக்கு மேல் செலவு செய்யப்பட்டு விட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
