அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்தவரா இவர்?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க
அருந்ததி படம்
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 2009ம் ஆண்டு நடிகை அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு திகிலூட்டிய திரைப்படம் அருந்ததி.
தெலுங்கில் தயாரான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் என டப் செய்யப்பட்டு வெளியாக அனுஷ்காவிற்கு பெரிய ரீச் கொடுத்தது. ரிலீஸ் ஆன எல்லா மொழிகளிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ. 13 கோடி தான் ஆனால் வசூல் கிட்டத்தட்ட ரூ. 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது.
படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது, இன்று வரை அனுஷ்காவின் அருந்ததி படம் பேசப்படும் படமாக உள்ளது.

குட்டி அனுஷ்கா
படத்தில் அனுஷ்காவின் சிறுவயது ஜக்கம்மா கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார் திவ்யா நாகேஷ். தமிழ், தெலுங்கு என 40 படங்களுக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அட அருந்ததி பட சிறுமியா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

பிரித்தானியாவில் எதிர்ப்பை மீறி புலம்பெயர்ந்தோருக்கு புகலிடம்: குழந்தைளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri