சன் தொலைக்காட்சியில் முடிவுக்கு வரும் தொடர், திடீரென நடந்த அதிரடி மாற்றம்- என்ன தெரியுமா?
சன் சீரியல்கள்
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் தான். காலை தொடங்கி இரவு வரை தொடர்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் எல்லா தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, எதிர்நீச்சல் என நிறைய ஹிட் தொடர்கள் உள்ளது.
தற்போது சன் டிவியில் ஒரு ஹிட் தொடர் முடிவுக்கு வர இன்னொரு தொடரின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.
எந்த தொடர்
இந்த தொலைக்காட்சியில் அருவி தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிடா, கார்த்திக் வாசு, அம்பிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருவதால் சீரியல் குழுவே மதியம் 2.30 மணி வேண்டாம், பிரைம் டைம் வேண்டும் என்று கேட்டிருந்தனர்.
தற்போது பிரியமான தோழி தொடர் முடிவை எட்டியுள்ள நிலையில் மதிய பிரைம் டைம் ஆன 1 மணிக்கு அருவி தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.