பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட அரவிந்த் சாமி.. அவர் நிஜ அப்பா இந்த சீரியல் நடிகரா?

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
நடிகர் அரவிந்த் சாமியை தற்போதைய இளம் தலைமுறையினருக்கு தனிஒருவன் சித்தார்த் அபிமன்யுவாக தான் தெரியும். ஆனால் அவர் 90களில் ரோஜா, பம்பாய், மின்சார கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக இருந்தார்.
மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு தனிஒருவன் படம் அவருக்கு பிரம்மாண்ட கம்பேக் கொடுத்து. அதற்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் அரவிந்த் சாமி.
நிஜ அப்பா
நடிகர் அரவிந்த் சாமி பிறந்த உடனேயே தத்து கொடுக்கப்பட்டவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
சித்தி, மெட்டி ஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கும் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் நிஜ அப்பா.
டெல்லி குமாரின் அக்காவுக்கு அரவிந்த் சாமியை தத்து கொடுத்துவிட்டாராம். அந்த குடும்பத்தில் வளர்ந்ததால் அரவிந்த் சாமிக்கு டெல்லி குமார் மற்றும் குடும்பத்துடன் அதிகம் டச் இல்லாமல் தான் இருக்கிறதாம்.
எப்போவாவது வீட்டில் எதாவது பங்க்ஷன் என்றால் மட்டும் அரவிந்த் சாமி வந்துவிட்டு போவார் அவ்வளவு தான் என நடிகர் டெல்லி குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.