மற்றவர்கள் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை.. அதிரடியாக பதிலளித்த தனி ஒருவன் பட வில்லன் அரவிந்த்சாமி
நடிகர் அரவிந்த்சாமி
தனி ஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் அரவிந்த்சாமி. இன்றும் அந்த படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
அவர் செய்யும் பிசினஸிற்கான நேரம் போக மற்ற நேரத்தில் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இவர் 96 போன்ற சிறந்த படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் உருவான மெய்யழகன் படத்தில் நடித்திருக்கிறார்.
அரவிந்த்சாமி அளித்த பதில்
இந்த படம் தொடர்பான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரவிந்த்சாமியிடம் தொகுப்பாளர் ரசிகர் மன்றம் குறித்த கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அரவிந்த்சாமி, "எனக்கு ரசிகர் மன்றம் வைப்பதால் யாருக்கு என்ன பயன், எனது மகன் என்னிடம் வந்து ரசிகர் மன்றத்தில் சேர போகிறான் என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், படத்தை பார்ப்பதுடன் நிறுத்திக்கொள் என்று கூறுவேன்.
அவ்வாறு இருக்கும்போது எனக்கு மற்றவர்கள் ரசிகர் மன்றம் வைக்க வேண்டும் என்று நினைத்தால் அதை நான் எவ்வாறு வரவேற்பேன், என் பையனுக்கு ஒரு அட்வைஸ், மற்றவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு அட்வைஸ் எப்படி சொல்ல முடியும்" என்று அதிரடியாக கூறியுள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
