நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! எவ்வளவு தெரியுமா?
அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஆர்யா, தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
எந்தவித கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று சிறப்பாக நடிப்பவர் ஆர்யா. அந்த வகையில் நான் கடவுள், அவன் இவன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்கள் ஆர்யாவின் சிறந்த திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த வருடம் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துசண்டை வீரராகவே மாறி அனைவரையும் கவர்ந்திருந்தார் ஆர்யா.
ஆர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தால் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இதனிடையே ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது, அதன்படி ஆர்யாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 80 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஆர்யா, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.