நடிகர் ஆர்யா, நயன்தாரா நடித்திருக்கும் அடுத்த படத்தின் first look வெளியீடு;
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னனி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான டெட்டி, சார்பாட்டா பரம்பரை ஆகிய படங்களின் பெரும் வெற்றியை தொடர்ந்து இவரும் விஷாலும் இணைந்து நடித்த எனிமி படமும் மக்களிடையே நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆர்யா நடிக்கும் அடுத்த படத்தின் first look போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. கேப்டன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார்,படத்திற்கு இமான் இசையமைக்குகிறார். sci-fic படமாக அமைய இருக்கும் கேப்டன் படம் ஆர்யாவின் 33-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியிருக்கிறார் .
இதனையொட்டி அவர் நடிக்கும் அடுத்த படத்தை குறித்த அப்டேட்டும் வெளியாகியிருக்கிறது. அதன்படி அஸ்வின் சங்கரன் இயக்கி நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு கனெக்ட் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நயன்தாராவுடன் அனுபாம் கேர் சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.