நடிகர் ஆர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆர்யா. நடிப்பு மட்டுமின்றி சைக்கிளிங் மற்றும் உடற்ப்பயிற்சி ஆகிய விஷ்யங்களில் ஆர்வம் கொண்டவர்.
நீண்ட நாட்களாகவே லண்டன் எடின்பர்க் லண்டன் போட்டிக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது லண்டனியில் நடைபெற்ற இந்த போட்டியில் கலந்துகொண்டு 1540 கிலோமீட்டர் சைக்கிள் ஒட்டி போட்டியை நிறைவு செய்துள்ளார்.
அவர் மட்டுமின்றி அவருடைய குழுவினர்களும் இந்த போட்டியை நிறைவு செய்துள்ளனர்.
ஆர்யாவின் சாதனை பதிவு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ' எனது குழுவுடன் லண்டன் எடின்பர்க் லண்டன் போட்டியில் 1540 கிலோமீட்டர் கைக்கிளிங் போட்டி வெற்றிகரமாக நிறைவேறியது. என்னுடைய வாழ்க்கையில் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஆதரவிற்கும், என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் நன்றி ' என பதிவு செய்துள்ளார்.
இந்த முயற்சியை செய்து சாதனை படைத்துள்ள நடிகர் ஆர்யாவிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Successful completed London Edinburgh London 1540 kms cycling event with my team. One of the most challenging Endeavour in my life. Thanks to my Family and friends for their support and belief 😍😍🤗 Ready for the next Challenge 😜 pic.twitter.com/TCkkUNiaO5
— Arya (@arya_offl) August 14, 2022