மோசடி வழக்கில் ஆர்யாவை கைது செய்ய வேண்டும் என்று புகார், இதுக்கு இல்லையா ஒரு முடிவு
ஆர்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி-யில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா தன்னை ஏமாற்றியதாக ஒரு ஜெர்மன் பெண் வழக்கு தொடர்ந்தார்.
அதை தொடர்ந்து போலிஸார் விசாரிக்கையில் ஆர்யா பெயரில் சில பேர் செய்த மோசடி தான் என்று தெரிய வந்தது, பிறகு ஆர்யா நிம்மதியானார்.
ஆனால், வழக்கு தொடர்பாக நீதிமன்ற போலிஸார் தாக்கல் செய்த முதல் அறிக்கையில் ஆர்யா முதல் குற்றவாளியாகவும், அவருடயை தாயார் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், அதனால் ஆர்யாவை கைது செய்ய வேண்டும் என்று ஜெர்மன் பெண் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
இதன் பின் ஆர்யா நேற்று சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.