சார்பட்டா பரம்பரை பட வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் ஆர்யா?- அதுவும் இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவில் ஒரு படம் மூலம் மார்க்கெட் பிடிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.
எப்படி படம் எடுத்தாலும், நடித்தாலும் அதை குறை கூறுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். அண்மையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் OTT தளத்தில் வெளியாகி இருந்தது.
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான் கிடைத்துள்ளது.
இதனால் வெற்றி நாயகனாக வலம் வரும் ஆர்யா தனது சம்பளத்தை அடுத்த படத்தில் உயர்த்தியுள்ளாராம். இதுவரை ரூ. 10 கோடி சம்பளம் பெற்றுவந்த அவர் இப்பட வெற்றியை தொடர்ந்து ரூ. 20 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த சம்பள உயர்வு விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.