நடிகர் ஆர்யாவின் சிறந்த படங்கள்- ஒரு பார்வை
ஆர்யா தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எப்போது சினிமா நிகழ்ச்சிகளில் மிகவும் டீசன்டான, அமைதியான முகத்தை தான் காட்டுவார்கள்.
ஆனால் இவர் அப்படி கிடையாது தான் இருக்கும் இடத்தில் எப்போதும் ஜாலியாக, கலகலப்பாக, நிகழ்ச்சி மேடைகளில் கூட எல்லோரையும் சிரிக்க வைக்கும் படி பேசுவார்.
ஆர்யா என்றாலே ஜாலியான நடிகர் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் இவர் 2005ல் அறிந்தும் அறியாமலும் என்ற படம் மூலம் ஹீரோவாக களமிறங்கினார், இப்படத்திற்காக அறிமுக நாயகன் என்ற பிலிம்பேர் விருது கூட பெற்றார்.
அதன்பிறகு உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை என இளைஞர்களை கவரும் வண்ணம் படங்கள் நடித்து வந்த ஆர்யா நான் கடவுள் படத்தின் மூலம் வேறொரு அவதாரம் எடுத்தார்.
அப்படி ஆர்யா திரைப்பயணத்தில் அவர் நடித்த சிறந்த படங்களின் ஒரு தொகுப்பை காண்போம்.
நான் கடவுள் (2009)
பாலா இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படம். ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். இப்படத்திற்கு ஜெயமோகனே வசனங்களை எழுதியிருக்கிறார். அகோரியாக ஆர்யா இதில் நடித்து எல்லோரையும் அசத்தியிருப்பார்.
படமும் கொஞ்சம் பார்க்கவே நமக்கு கஷ்டமாக இருந்தாலும் ஆர்யா இப்படம் மூலம் வேறலெவல் ரீச் பெற்றார். சிறந்த இயக்குனர், மேக்கப் கலைஞர் இரண்டிற்காக தேசிய விருது கிடைத்தது.
மதராசப்பட்டினம் (2010)
இந்த படம் முழுவதும் ஆர்யாவை ரசிக்கும் வண்ணம் இருக்கும். 1947ம் ஆண்டு நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றி கூறும் படமாக அமைந்திருக்கும். இப்படத்தின் மூலம் ஏ.எல்.விஜய் எமி ஜாக்சனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
படத்தின் கதை நமக்கு நன்றாக அத்துபடி தான். இப்படம் 15 வாரங்கள் முழுவதும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆர்யா காதல் மன்னனாகவும், ஒரு போராளியாகவும் நடித்து அசத்தியிருப்பார்.
ராஜா ராணி (2013)
அட்லீ இயக்கிய இப்படம் மக்களுக்கு ஒவ்வொரு சீனும் நியாபகம் இருக்கும் 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த திரைப்படம்.
நாம் பார்த்து பழகிய காதல் கதைதான், ஆனால் அட்லீ இயக்கம் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். ஆர்யாவின் நடிப்பு இதில் சிறப்பாகவே இருக்கும்.
கடம்பன் (2017)
காடு சம்பந்தப்பட்ட ஒரு கதை. காட்டில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் இருக்கும் அதை எடுக்க அங்கிருக்கும் மக்களை வெளியேற நினைக்கும் ஒரு கும்பல். ஆனால் தங்களது இடத்தை விட்டு வெளியேற மறுக்கும் மக்கள்.
பொதுவாக காட்டை சம்பந்தப்பட்டு எடுக்கும் கதைகள் இதுபோன்ற கதையாக தான் இருக்கும். ஆனால் இதில் ஆர்யாவின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும், காட்டில் படப்பிடிப்பை பல கஷ்டத்திற்கு நடுவில் எடுத்துள்ளார்கள்.
டெடி (2021)
சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சயீஷா ஜோடியாக நடித்த திரைப்படம். ஒரு பொம்மை அதை வைத்து கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் அமைத்து நம்மை எமோஷ்னல் ஆக்கிய திரைப்படம். OTTயில் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
சார்பட்டா பரம்பரை (2021)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ஒரு திரைப்படம். Birsa Munda என்பவரின் வாழ்க்கை கதையை தான் படமாக எடுத்துள்ளனர், இதில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். இப்படமும் மக்களிடம் நல்ல ஹிட், ஆர்யாவை தாண்டி மற்ற கலைஞர்களுக்கும் மக்களிடம் பாராட்டு கிடைத்தது.
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை News Lankasri
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)