மதராசபட்டினம் முதல் அவன் இவன் வரை.. ஆர்யாவின் நடிப்பில் சிறந்த படங்கள்
நடிகர் ஆர்யாவின் சிறந்த படங்கள் பற்றி ஒரு பார்வை..
மதராசபட்டினம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முற்பட்ட காலத்தில் நடக்கும் கதை. டோபி வேலை பார்க்கும் ஆர்யாவிற்கும் ஆங்கிலேயே கவர்னர் மகள் எம் ஜாக்சனுக்கும் இடையில் நடக்கும் காதல் கதை தான் இந்த மதராசபட்டினம்.
அந்த காலத்தில் சென்னை எப்படி இருந்தது என்பதை தத்ரூபமாக கண்முன் கொண்டுவந்திருந்தது இந்த படம். ஆர்யா கேரியரில் மிக முக்கிய படம் இது.
நான் கடவுள்
பாலா இயக்கிய இந்த படத்தில் ஆர்யா அகோரியாக நடித்து இருப்பார். பாலாவுக்கே உண்டான பாணியில் ஆர்யா அந்த படத்தில் காசியில் வளர்ந்த அகோரி லுக்கில் கச்சிதமாக பொருந்தி இருந்தார். அவரது உடற்கட்டும் அதற்க்கு தகுந்தாற் போல மாற்றினார்.
இயக்குனர் பாலாவுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
ராஜா ராணி
அட்லீ இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் இது. காதல் தோல்விக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது தான் ராஜா ராணி கதை.
காதலி கண் முன்னே இறந்த துக்கத்தை வருடக்கணக்கில் மறக்காமல் இருக்கும் ஹீரோ, தனது காதலன் இறந்த செய்தி கேட்டு வருத்தத்தில் இருந்தாலும் அப்பாவுக்காக ஹீரோவை திருமணம் செய்துகொண்டு வாழ செல்லும் ஹீரோயின் என படத்தின் துவக்கம் இருக்கும்.
அவர்கள் இறுதியில் சேர்ந்தார்களா? பழைய காதல் பிரச்சனையை தந்ததா? என்பது தான் ராஜா ராணி படத்தின் மீதி கதை.
பாஸ் என்கிற பாஸ்கரன்
ஆர்யா மற்றும் நயன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ராஜேஷ் இயக்கினார். ஆர்யா மற்றும் சந்தானம் சேர்ந்து அடிக்கும் காமெடி லூட்டி இந்த படத்தை பார்க்கும்போது நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும்.
சொந்த கால்ல நின்று ஜெயித்தால் தான் ஹீரோயினை திருமணம் செய்ய முடியும் என்கிற சூழ்நிலையில் இருக்கும் ஹீரோ, கடன் வாங்கி ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிக்கிறார். அதில் ஜெயிக்க அவர் படும் கஷ்டத்தை காமெடியாக காட்டி இருக்கும் இந்த படம்.
அகோரியாக நடித்த ஆர்யாவுக்கு இப்படியும் நடிக்க முடியும் என காட்டியது பாஸ் என்கிற பாஸ்கரன் படம்.
அவன் இவன்
பாலா இயக்கிய படம் தான் அவன் இவன். விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிராமத்தல் நடக்கும் கதை. ஆர்யா மற்றும் விஷால் இருவருக்குமே பாலாவின் ட்ரேட் மார்க் ரோல் தான். அவர்கள படம் முழுவதும் பேசும் வசனம் தான் சற்று ஏ ரேட்டிங் வார்தைகள் கலந்திருக்கும்.
படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் இந்த படம் ஆர்யாவின் நடிப்பு திறமையை நிரூபிக்க உதவிய படம்.
பல முக பாவங்களில் ஆர்யா நடித்து காட்டுவது போலவும் அதற்கு நடிகர் சூர்யா பாராட்டுவது போலவும் படத்திலேயே காட்சி இருக்கும்.
பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் வெளியானது! எப்படி இருக்கு பாருங்க
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![ஃப்ரிட்ஜில் வெங்காயத்தை இப்படி வைக்கிறீங்களா? இந்த ஆபத்து வரும் - திகிலூட்டும் நிபுணர்கள்..!](https://cdn.ibcstack.com/article/94bafdfe-4f1c-4426-9535-70d4181c1660/25-67a48bf11f281-sm.webp)