நிஜமான ‘வீட்ல விசேஷம்’ பட கதை.. 23 வயது நடிகையின் அம்மா பெற்றெடுத்த குழந்தை
கடந்த ஆண்டு ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் வீட்ல விசேஷம். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

இந்த படத்தில் நடிகர் ஆர். ஜே பாலாஜியின் அம்மா ஊர்வசி வயதான பிறகும் கர்ப்பம் ஆவார். இதனால் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக இப்படத்தில் காட்டியிருப்பார்கள். தற்போது இதுபோல நிஜத்திலேயே நடந்திருக்கிறது.

ஆர்யா பார்வதி
மலையாளத்தில் சின்னத்திரையில் நடித்து வருபவர் தான் ஆர்யா பார்வதி. தற்போது இவருக்கு வயது 23 ஆகிறது.
இந்நிலையில் 47 வயதான இவரின் அம்மாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன்பு இவரின் அம்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர். 

150 கோடியில் கட்டப்பட்டுள்ள தனுஷ் வீட்டின் வெளிப்புறத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    