டான்சிங் ரோஸாக தளபதி விஜய்.. நடிகர் ஆர்யா செய்து ரீபிளே
பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படம் வெளியானது. இதில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார்.
பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் கொக்கன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆனால் இவர்களை எல்லாம் விட, இப்படத்தில் இடம்பெற்றிருந்த டான்சிங் ரோஸ் எனும் கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டது. இந்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில், நடிகர் ஷபீர் என்பவர் நடித்திருந்தார். இவர் அடங்க மரு, பேட்ட உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல இந்த டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தை, ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் வைத்து எடிட் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யை வைத்து ரசிகர் ஒருவர் எடிட் செய்து, அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த நடிகர் ஆர்யா, ரீபிளே செய்து Fire சிம்பிள் போட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..
— Arya (@arya_offl) July 29, 2021
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri