வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகர் ஆர்யா.. வெளியான சுவாரஸ்யமான தகவல்
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகி வருகிறது.
அதே போல் ஓடிடி-யில் வெளியாகும் வெப் சீரிஸும் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
இதனால் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா, வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் அறிமுகமாகும் வெப் சீரிஸை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
