தீபாவளி ரேஸில் புதிதாக இணைந்த விஷால் - ஆர்யா, மாஸ் அப்டேட்..
அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் கூடுதலாக ஒரு சில திரைப்படங்கள் இந்த ரேஸில் இணைந்து வருகிறது.
அதன்படி ஏற்கனவே ரஜினியின் அண்ணாத்த, சிம்புவின் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.
சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படமும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது விஷால் - ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள Enemy திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.