யூடியூபில் வந்த விவாகரத்து செய்தி குறித்து முதன்முறையாக பேசிய சீரியல் நடிகை ஷபானா- இதோ அவரது பதிவு
ஜீ தமிழில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் செம்பருத்தி. மும்பையை சேர்ந்த ஷபானா தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் 2016ம் ஆண்டில் இருந்து நடிக்க தொடங்கினார்.
இவருக்கு கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி ஆர்யன் என்ற நடிகருடன் காதல் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்தில் உறவினர்கள் யாரும் அதிகம் இல்லை, எனவே இவர்கள் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்தார்களா என்ற பேச்சு அடிபட்டது.
காரணம் இருவரும் மதத்தை தாண்டி திருமணம் செய்தது அவர்களது வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர் ஒருவர் நடிகை ஷபானாவிடம் விவாகரத்து செய்தி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு ஷபானா, யூடியூபில் வரும் செய்திகளை கண்மூடித்தனமாக நம்பும் பார்வையாளர்களை நினைத்தால் ரொம்ப பாவமாக இருக்கிறது.
என்னை பொருத்தவரை அவர்கள் ஒரு சரியான மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு கொடுப்பதில் கொஞ்சமாவது கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.